கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
1 min read
4 killed in car collision with cargo vehicle on Kumbakonam-Thanjore road
8.7.2025
சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட புனித தலங்களுக்கு சுற்றுலாவாக சிலர் காரில் சென்றனர். அவர்கள் கும்பகோணத்திற்கு சென்று விட்டு, தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டனர்.
அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றின் மீது, விரைவாக சென்று கொண்டிருந்த கார் திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், சுற்றுலாவுக்காக சென்ற 4 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் என்னவென உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.