தென் அமெரிக்கா நாட்டின் முதல் பெண் அதிபராக ஜெனிபர் தேர்வு
1 min read
Jennifer elected as first female president of South American country
8.7.2025
தென் அமெரிக்காவில் உள்ள கடலோர நாடாக சூரினாம் உள்ளது. டச்சுக்காரர்கள் ஆட்சிக் அதிகாரத்தின் கீழ் இருந்த இந்த நாடு 1975-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. முன்னதாக தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து பலர் அங்கு தோட்ட வேலைக்காக அடிமைகளாக கடத்தி செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கேயே அவர்கள் குடியேறி தற்போது அதிகளவில் வசித்து வருகிறார்கள்.
இந்த நாட்டின் அதிபராக உள்ள சான் சந்தோகியின் பதவிக்காலம் முடிந்தநிலையில் அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் 71 வயதான பெண் டாக்டரான ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் போட்டியிட்டார். தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனால் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக ஜெனிபர் தேர்வாகி உள்ளார். வரும் 19-ந்தேதி பதவியேற்பு விழாவில் ஜெனிபர் பதவியேற்க உள்ளார்.