July 9, 2025

Seithi Saral

Tamil News Channel

கடலூர் ரெயில் விபத்து – புதிய கேட் கீப்பராக ‘தமிழர்’ நியமனம்

1 min read

Cuddalore train accident – ‘Tamil’ appointed as new gatekeeper

9.7.2025
கடலூர் செம்மங்குப்பம் அருகே நேற்று காலை பள்ளி வேன்

ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது பள்ளி வேன் மீது

சிதம்பரம் நோக்கி சென்ற ரெயில் மோதியது. இந்த சம்பவத்தில் 2

மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் உயிரிழந்தனர்.பள்ளி வேன்

டிரைவரும், மற்றொரு மாணவனும் படுகாயங்களுடன் புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தின்போது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே

விபத்துக்கு காராம் என தெரியவந்துள்ளது. ரெயில்வே கேட் கீப்பர்

பங்கஜ் சர்மா பணியின்போது தூங்கியதே விபத்துக்கு காரணம் என

பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக

ரெயில்வெ கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை ரெயில்வே சஸ்பெண்ட்

செய்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை

போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரெயில்வே

கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே சட்டப்பிரிவுகளின்கீழ் கைது

நடவடிக்கை மேற்கொள்ளப்பப்ட்டுள்ளது.

இந்த நிலையில், செம்மங்குப்பம் ரெயில் கேட்டில் புதிய கேட்

கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாடில் நியமித்தது

சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு

ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.