இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு விரைவில் 10 சதவீதம் வரி – டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
1 min read
Trump warns again that BRICS countries, including India, will soon be subject to a 10 percent tariff
9.7.2025
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், “அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரிக்ஸ் நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்” என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவில் உள்ளதால் இந்தியாவுக்கும் டிரம்ப் 10 சதவீதம் வரி விதிப்பாரா? என்று அச்சம் எழுந்துள்ளது.