திருப்பதி மலையில் அதிக புகை வெளியிடும் வாகனங்களுக்கு தடை
1 min read
Vehicles emitting high levels of smoke banned on Tirupati Hill
9.7.2025
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் 8000-க்கும் மேலான கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மலைக்கு வரும் சில வாகனங்கள் அதிக அளவு புகையை வெளியேற்றுகிறது. இதனால் காற்று மாசு அடைந்து வருகிறது. இதனை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் அதிக அளவில் புகையை வெளியேற்றும் வாகனங்கள் மலைக்கு வர தடை வித்துள்ளனர். இந்த வாகனங்களை கண்டறிந்து திருப்பி அனுப்ப திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி, திருப்பதி மலைக்கு வரும் வாகனங்கள் புகை பரிசோதனை சான்றுகளை அலிபிரியில் உள்ள அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
புகை சான்று இல்லாத வாகனங்களை கண்டறிய அலிபிரியில் ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு மையத்தில் பரிசோதனையின் போது 4.0 அளவை விட அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டு வருகிறது.
வாகனங்களில் வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.