கடையநல்லூரில் நூதன முறையில் நகை திருடிய மூதாட்டி
1 min read
An old woman stole jewelry in a unique way in Kadayanallur
0.7.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நூதன முறையில் தங்க நகையை திருடிய பாட்டியை சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நகை கடையில் கவரிங் செயினை வைத்துவிட்டு 4 சவரன் தங்க செயினை மூதாட்டி ஒருவர் லாவகமாக திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல் காதர் என்பவரின் நகை கடைக்கு வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினுக்கு பதிலாக இடுப்பில் மறைத்து வைத்திருந்த கவரிங் நகையை கண் இமைக்கும் நேரத்தில் மற்றி வைத்து திருடி சென்றுள்ளார்.
இது குறித்து அப்துல் காதர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவர் அளித்த புகாரின் பேரில் மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.