அன்புமணி என்னுடைய பெயரை போடக் கூடாது;- ராமதாஸ் ஆவேசம்
1 min read
Anbumani should not use my name;- Ramadoss is furious
10.7.2025
கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி குறித்து ராமதாஸ் சூசகமாகப் பேசினார்.
அவர் பேசுகையில், “என்னுடைய பெயரை போடக் கூடாது; இனிசியலை போட்டுக்கொள்ளலாம். என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. செயல் தலைவர் என்றுதான் சொல்கிறோம். மக்களைச் சென்று பாருங்கள். மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஐந்து வயது குழந்தைதான், 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக்கியது என்று பேசினார்.
முன்னதாக, வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அன்புமணி கூறியிருந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ் பேசியுள்ளார்.
எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.