மருதங்கிணறு கிராமத்தில் மனுநீதி நாள் முகம்
1 min read
Human Rights Day celebrated in Maruthanginaru village
10.7.2025
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதங்கிணறு வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட மருதங்கிணறு கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் கிராமம் தோறும் மனுநீதி நாள் முகாம் ள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 02 பயனாளிகளுக்கு ரூ.54,450 மதிப்பிலான வரன்முறை பட்டாவிற்கான ஆணைகளையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 14,000/- மதிப்பிலான முதியோர் உதவித்தொகைகளையும், 01 பயனாளிக்கு ஆண்டுக்கு 34,000 மதிப்பிலான விதவை உதவித்தொகையினையும், 02 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளையும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு தென்னை மரக்கன்றுகளையும் 03 பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகளையும், வேளாண்மைத்தறையின் மூலம் 01 பயனாளிக்கு இயற்கை உரத்தினையும், 01 பயனாளிக்கு மண்புழு உரப் படுக்கைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, சமூகநலத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தார்கள். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இம்முகாமில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கனகம்மாள். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெசிமா பானு. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம். தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராஜ் குமார் உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன் திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் செல்வக்குமார். மருதங்கிணறு ஊராட்சி மன்றத்தலைவர் சின்னபேச்சிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன். மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.