குற்றாலத்தில் சாரல் திருவிழா, 19-ந் தேதி தொடங்குகிறது
1 min read
Saral festival begins in Courtallam on the 19th
10.7.2025
தென்காசி மாவட்டஆட்சியரக கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாரல் திருவிழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் சாரல் திருவிழா இந்த ஆண்டு ஜுலை மாதம் 19 முதல் 27 வரையில் நடைபெற உள்ளது.
மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக ஐந்தருவிப் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 19.07.2025 முதல் 22.07.2025 வரையில் மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளது. சாரல் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
19.07.2025 அன்று பரதநாட்டியம், ஜிக்காட்டம். நையாண்டிமேளம். கரகாட்டம் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும், 20.07.2025 அன்று கொழு கொழு குழந்தைகள் போட்டி, கிராமியகலைநிகழ்ச்சி, கைச்சிலம்பாட்டம் நிகழ்ச்சி. கேரளா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும், 21.07.2025 அன்று யோகாசன போட்டிகள், நாட்டிய நாடகம், வில்லிசை நிகழ்ச்சி. தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி, மற்றும் திரைப்பட மெல்லிசையும், 22.07.2025 அன்று படகுப்போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, கொடைக்கானல் பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடர் நடனம் நிகழ்ச்சி, கர்நாடக மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசையும்,
23.07.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம், கவிதை மற்றும் பாட்டுப்போட்டி. திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சிகள், கணியான்கூத்து நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மெல்லிசை நிகழ்ச்சியும், 24.07.2025 அன்று கோலப்போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லர்கம்பம் நிகழ்ச்சி, பரதநாட்டியம் நிகழ்ச்சி, ஆந்திரா / தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சியும், 25.07.2025 அன்று அடுப்பில்லாமல் சமைத்தல் மற்றும் சிறுதானிய உணவுப்போட்டி, நையாண்டிமேளம் மற்றும் கரகாட்டம், கிளாரிநெட் இசைநிகழ்ச்சி, தப்பாட்டம் நிகழ்ச்சி, ஆந்திரா / தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் திரையிசை தெம்மாங்கு நிகழ்ச்சியும்,
26.07.2025 அன்று பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி, ஜிம்ளாமேளம் (எருதுகட்டு மேளம்) நிகழ்ச்சி, மெல்லிசை நிகழ்ச்சியும், 27.07.2025 அன்று நாய்கள் கண்காட்சி. நாட்டிய நாடகம் நிகழ்ச்சி, கிராமிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி. மாடாட்டம் மற்றும் மயிலாட்டம் நிகழ்ச்சி, மகாராஷ்ரா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.