July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

1 min read

Special worship of Edappadi Palaniswami at Muthumala Murugan Temple

10.7.2025
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி, `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று (புதன் கிழமை) காலை சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள முத்துமலை முருகன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது எழுச்சிப் பயணம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்ட வெள்ளி வாள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான இளங்கோவன், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் இளம்பை ஆர். தமிழ்ச்செல்வன், கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ஜெயசங்கரன், கங்கவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா (எ) ராஜமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.