சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா13-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்
1 min read
Subhanshu Shukla returns to Earth from the International Space Station on the 13th
10.7.2025
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு புறப்பட்டனர். சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 28 மணிநேர பயணத்திற்கு பிறகு கடந்த 26-ந்தேதி மாலை 4 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்த விண்கலம் சென்றடைந்தது.
இதில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன், அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர். 14 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, நுண்ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு வருகிற சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 13-ந்தேதி புறப்பட்டு வருகிற 14-ந்தேதி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் பூமியை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை நாசா – இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.