திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது
1 min read
Thiruchendur was swallowed by the sea
11.7.202 5
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விண்ணதிர்ந்த ‘அரோகரா’ கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏக காலத்தில் நடந்த இந்த மகா கும்பாபிஷேக காட்சியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பவுர்ணமி தொடங்கியது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனால் பாசி படர்ந்த பச்சை நிற பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.
மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.