தோரணமலை கிரிவலம்: கோர விபத்துகளை தடுக்க கூட்டுப்பிரார்த்தனை
1 min read
Thoranamalai Girivalam: Collective prayer to prevent serious accidents
10.7.2025
தென்காசி மாவட்டம், தென்காசி – கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. மேலும் கிரிவலம் முடிந்ததும் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையும் நடக்கும்.
அதன்படி ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
அவர்கள் கோவிலை அடைந்ததும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதில் கீழ்கண்ட வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டன.
நாடி வந்தோருக்கு நலம் காத்து வேண்டியதை அருள்வாய் தோரணமலை முருகா; கோர விபத்துகளை முன்னின்று தடுத்து உயிர்காப்பாய் தோரணமலை முருகா; வழிதவறி செல்வோரை நல்வழி படுத்துவாய் தோரணமலை முருகா;
ஆதரவற்றோருக்கு உடனிருந்து அருள்வாய் தோரணமலை முருகா; கிராமத்து இளைஞர்கள் உயர்கல்வி பெற்று அதிகார அந்தஸ்து பெற வேண்டும் தோரணமலை முருகா; தோரண மலை முருகனுக்கு தொண்டாற்றும் அடியவர்களுக்கு துணை நிற்பாய் இறைவா; உன்பாதம் தொழுவோருக்கு உயர்நிலையை தருவாய் தோரணமலை முருகா; நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்கள் பெருகிட வேண்டும் தோரணமலை முருகா
மேற்கண்ட கோரிக்கைகளை வேண்டி பிரார்த்தனை நடந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.