May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி கைது; ஜாமீனில் எடுக்கப்போவது இல்லை என தந்தை அறிவிப்பு

1 min read


Arrested college student chanting in support of Pakistan; Father announces he will not take bail

21/2/2020

பெங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் எடுக்க மாட்டேன் என்று அவரது தந்தை அறிவித்து உள்ளார்.

போராட்டம்

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்கு எதிராக போராாட்டம் நடந்தத- அங்குள்ள சுதந்திர பூங்காவில் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா, மேலும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஓவைசி எம்.பி.யும் அழைக்கப்பட்டு இருந்தார்.

போராட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஓவைசி எம்.பி., மாநகராட்சி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி மாணவியை, மேடைக்கு வந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேச அழைத்தனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்

இந்த நிலையில், மேடையில் ஏறிய அந்த மாணவி திடீரென்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று (பாகிஸ்தான் வாழ்க) என்று கோஷமிட்டார்.

அந்த மாணவி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதை கேட்டதும் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓவைசி எம்.பி. உள்ளிட்டோர் மாணவியின் அருகே சென்று, அவர் கையில் இருந்த மைக்கை பிடுங்க முயன்றனர். ஆனால் அவர் மைக்கை கொடுக்க மறுத்து விட்டார். மாறாக இந்தியாவுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டார்.

கைது

ஆனாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி கோஷமிட்டதால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவரை பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.
பின்னர் உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனா(வயது 19) என்பதும், கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வருவதும் தெரிந்தது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் அவர் கலந்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
என்றாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமுல்யா கோஷமிட்டதால், அவர் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். அவர் மீது தேச தூரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓவைசி எம்.பி. அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார். அவரை, அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து, அவர் மேடைக்கு திரும்பி வந்தார்.

பின்னர் ஓவைசி எம்.பி. பேசுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது தவறானது. அந்த இளம்பெண் எதற்காக பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார் என்பது தெரியவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு தான் இங்கு கூடியுள்ளோம். அந்த இளம்பெண்ணை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவதற்கு அழைத்து வரவில்லை,” என்றார்.

மாணவி வீடு மீது கல்வீச்சு

இதற்கிடையே சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் உள்ள மாணவி அமுல்யாவின் வீட்டுக்கு நேற்று இந்து அமைப்பினர் திரளாக சென்றனர். அவர்கள் அந்த மாணவிக்கு எதிராக கோஷம் போட்டனர். திடீரென்று சிலர் அந்த வீட்டின் மீது கற்களை வீசினார்கள். இதில் வீட்டின் கண்ணாடி நொறுங்கியது.
இதுபற்றிய தகவல் கிடைத்துதம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களை விரட்டினர். மேலும் கல்வீச்சில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்தனர்.
அந்த வீட்டிற்கு போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மாணவி அமுல்யாவின் தந்தை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜாமீன் எடுக்க மாட்டேன்


எனது மகள் இப்படி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். அவளை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அவளை நான் ஜாமீனில் எடுக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.