May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் விற்பனை இல்லை- மத்திய அரசு புதிய சட்டம்

1 min read

Cigarettes


Cigarette will not sales below 21 year old – Central government
Will announce soon

24/2/2020

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது என்றும், பொது இடத்தில் புகை பிடித்தால் வசூலிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புகையிலை

புகையிலை பொருட்களால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் புகைபிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு கோவில்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் போன்றவை அமைந்துள்ள இடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விற்பனை இல்லை

புகைபிடிப்பது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு குழு ஒன்று அமைத்து இருந்தது. அந்த குழுவினர் விரிவான ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

அதில் பல்வேறு சிபாரிசுகளை வழங்கி இருக்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள் விற்கக்கூடாது என்று ஏற்கனவே தடை இருக்கிறது. அதை 21 வயதாக அதிகரிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றால் விதிக்கப்படும் அபராத தொகையை மேலும் உயர்த்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் சட்டம் தற்போது உள்ளது. அதை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புகையிலை பொருள் விற்பனை விதிமுறைகளிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

இந்த சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது சட்டமாக கொண்டு வரப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.