காஜல் அகர்வால் வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்
1 min read
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் பொதுவாக படுகவர்ச்சியாக நடிக்க மாட்டார். அதேபோல் மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவது கிடையாது.
இவர் தமிழில் நடித்து வெளிவந்த படம் கோமாளி. சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மாலத் தீவில் உள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த சில படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.
காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வால் கருப்பு மற்றும் பல வண்ணங்கள் கலந்த பிகினியை அணிந்து நீச்சல் குளத்தில் அமர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது சரக்குடன் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பி வைரலாகி வருகிறது.