June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரள போலீசார் நடனமாடிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ

1 min read
Seithi Saral featured Image
The Kerala police danced Corona Awareness Video

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வெளியே சென்று வந்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்த விழிப்புணர்வில் மலையாள நடிகர் மம்முட்டி, ஜெயராம், டோவினோ தாமஸ், நடிகை மஞ்சுவாரியர் உட்பட பலரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரள காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதில் திருவனந்தபுரத்தில் பணிபுரியும் 7 போலீசார் சீருடையில் முகக்கவசம் அணிந்து தோன்றுகின்றனர். சமீபத்தில் பிரித்விராஜ் நடித்த ‘ஐயப்பனும், கோஷியும்’ என்ற மலையாள படத்தில் பாலக்காடு அட்டப்பாடி பகுதியை சேர்ந்த நஞ்சம்மா என்ற தமிழ்பெண் நாட்டுப்புற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது. இதனால் நஞ்சம்மாவை கேரளா கொண்டாடி வருகிறது.

இந்த பாடலுக்கு நடனமாடியபடியே போலீசார் கைகளை எப்படி கழுவ வேண்டும் என காண்பிக்கின்றனர். ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோவை ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.