June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி

1 min read

Flash volleyball match at the store

29.6.2025
கடையம் காமராஜர் நினைவு கைப்பந்து கழகம் மற்றும் கடையம் யூத் பெடரேசன் இணைந்து 28ம் ஆண்டு ஒரு நாள் மின்னொளி கைப்பந்து போட்டியை நடத்தியன. கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 26-ந்தேதி சனிக்கிழமை இந்தப் போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் முன்னிலை வகித்தார்.
கடையம் யூத் பெடரேசன் தலைவர் மற்றும் தலைமைச் செயலக இணை செயலாளர்(ஓய்வு) இரா.வைத்திலிங்கம் வரவேற்றார். வருமானவரித் துறை அதிகாரி மீனாட்சிசுந்தரம் சிறப்புரையாற்றினார்.


போட்டியை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.
போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஸ்டீபன் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை தலைவர் இ.எஸ்.கே.ரமேஷ், செயலாளர் எஸ்.ஜெயராஜ், பொருளாளர் எம்.எஸ்.பிரபு மற்றும் பலர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *