கொரோனா தாக்கிய இளவரசர் சார்லஸ் குணமடைந்தார்:
1 min read
Prince Charles hit by Corona healed:
3/4/2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் குணம் அடைந்தார். அவரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
இளவரசர் சார்லஸ்
சீனாவை தாக்கிய கொரோள உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஏராளமானவர்களை பலிவாங்கிய இந்த கொரோனா உயர் அதிகாரிகள் மற்றும் ராஜ குடும்பத்தாரையும் விட்டு வைக்கவில்லை. ஸ்பெயின் நாட்டு இளவரசி இந்த நோயால் இறந்தார்.
இங்கிராந்து இளவரசர் சார்லசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தனிமை மற்றும் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் குணம் அடைந்தார்.
மோடி
கொரோனாவில் இருந்து மீண்ட இளவரசர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததற்கு வாழ்த்தும் கூறினார்.
அப்போது இங்கிலாந்து மருத்துவமனைகளில் மிகச்சிறந்த சேவைகளை புரிந்து வரும் இந்தியர்கள் குறித்து இளவரசர் சார்லஸ் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இரு தலைவர்களும் கொரோனாவை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்த நிலையில் பிரதமர் மோடி தமது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மக்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இளவரசர் சார்லஸ் நன்றி தெரிவித்துள்ளார்.