அமெரிக்காவில் புலியை தாக்கியது கொரோனா
1 min read
6/4/2020
Corona attacked the tiger in the USஅமெரிக்காவில் புலி ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளிடமும் பரவி வருவது தெரியவந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனாவால் தற்போது வரை 1,258,091 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 68,287 பேர் உயிர்ழந்துள்ளனர். மனிதர்களை மட்டுமே அச்சுறுத்தி வந்த இந்த கொடிய நோய் இப்போது விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் Bronx மிருககாட்சி சாலையில் இருக்கும் புலி ஒன்றிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பெரிதாக இருக்கும் மிருககாட்சி சாலைகளில் ஒன்று.
இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடியா என்ற நான்கு வயது பெண் சிங்கம் ஒன்று மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. ஏனெனில் குறித்த புலியானது உலர்ந்த இருமல் மற்றும் பசியின்மையால் சாப்பிடாமல் இருந்தது.
அதன் முடிவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் சகோதரியான அசூல் என்ற புலியும் இரண்டு அமுர் புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நாடியா உட்பட அனைத்து விலங்குகளும் குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஒருவரால் இந்த விலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் புலி ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மிருககாட்சி சாலை கடந்த மாதம் 16-ம் தேதி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.