June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அந்த குட்டிப்பெண்ணா இது…

1 min read
This is the little star Venba

நடிகை வெண்பா குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். சிவகாசி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தங்கச்சியாக நடித்து அசத்தினார். கற்றது தமிழ் படத்திலும் குட்டி அஞ்சலியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

அதன்பிறகு பள்ளிப் பருவ காலங்களிலேயே சினிமாக்களில் நடிகையாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் குறும்படங்களிலும் தொடர்ந்து நடித்த வண்ணம் உள்ளார்.

இருந்தாலும் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. மேலும் அவரது முகம் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதால் பலரும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க யோசித்து வருகிறார்கள்.

இதையெல்லாம் நினைத்து கவலைப்படாமல் தனது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார் வெண்பா.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுமணப்பெண் போன்ற அலங்காரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுிபத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.