தமிழகத்தில் மதுபானம் வாங்க ஆதார் எண் அவசியம்; ஐகோர்ட்டு நிபந்தனை
1 min read
Aadhaar number needed to buy liquor in Tamil Nadu; Icorded condition
6-5-2020
மதுபானம் வாங்குபவரின் பெயர், ஆதார் எண்
மற்றும் முகவரி தேவை என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை சென்னை ஐகோர்ட்டு விதித்து இருக்கிறது.
மதுக்கடைகள் திறப்பு
ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில்
தமிழகத்தில் மதுக்கடைகள் 7-ந் தேதி
திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஊரடங்க காலத்தில் மதுக்கடைகள் திறக்ககூடாது என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில்
மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
நிபந்தனைகள்
அதே நேரம் மது விற்பனைக்கு சில நிபந்தனைகளையும் சென்னை ஐகோர்ட்டு விதித்து உள்ளது. அதாவது 3 நாட்களுக்கு ஒருமுறை ஒருவருக்கு 1 பாட்டில் மட்டுமே மது விற்க வேண்டும். மது விற்பனையை கோர்ட்டு கண்காணிக்கும், விதிமீறல் இருந்தால் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்படும்.
ஆன் லைனில் பணம் செலுத்துவோருக்கு 750 மில்லி கொண்ட 2 பாட்டில்கள் தான் வழங்க வேண்டும். நேரடியாக கடைக்கு வந்து வாங்குபவர்களுக்கு 750 மில்லி மது பாட்டில் ஒன்றுதான் கொடுக்க வேண்டும். ஒருவர் ஒரு நாள் மது வாங்கினால் அடுத்த 3 நாட்களுக்கு மது கொடுக்க கூடாது. இதற்கு வசதியாக மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண் வாங்க வேண்டும் மேலும் மதுவுக்கு கொடுக்கும் ரசீதில் இவை இடம்பெற்று இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் கோர்ட்டு கண்காணிக்கும். இதில் ஏதேனும் தவறு நடந்தால் மதுக்கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிடும்.
மேற்கண்ட நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்தனர்.
மேலும் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணை மே 14-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வயது வாரியாக நேரம்
முன்னதாக தமிழக அரசு சார்பில் சென்னை ஐகேர்ட்டில் சில உறுதி மொழி அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது 50 வயது மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், 40 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு பகல் 1 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலு் மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.