தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கொரோனா பாதிப்பு
1 min read
Coronation affects 669 people in Tamil Nadu
10-5-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளல் 669 பேருக்கு பொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 1-ந்தேதி முதல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் 500க்கும் அதிகமாக உறுதி படுத்தப்பட்டு வருகிறது.. கோயம்போடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மூலம் பரவியதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நேற்று(சனிக்கிழமை) 526 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,535 ஆக இருந்தது.
இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது சிகிச்சை பெற்று வருபர்களின் எண்ணிக்கை 6,535 பேர்தான்.
இன்று சென்னையில் மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3839 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3330.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் இன்று மட்டும் (ஞாயிற்றுக்கிழமை) கொ ரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-
சென்னை- 509
திருவள்ளூர்-47
செங்கல்பட்டு-43
திருநெல்வேலி-10
கிருஷ்ணகரி-10
பெரம்பலூர்-9
காஞ்சிபுரம்-8
விழுப்புரம்-6
ராணிப்பேட்டை-6
அரியலூர்-4
மதுரை-4
தேனி-3
வேலூர்-3
விருதுநகர்-2
கடலூர்-1
கரூர்-1
புதுக்கோட்டை-1
ராமநாதபுரம்-1
திருப்பதூர்-1