July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் குறைந்த பயணிகளுடன் பஸ், ரெயில்களை இயக்க திட்டம்

1 min read


Plan to operate buses and trains with fewer passengers in Chennai

10-5-2020
சென்னையில் வருகிற 18-ந் தேதி முதல் குறைந்த பயணிகளுடன் பஸ், ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பஸ், ரெயில்கள்

கொரோன காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும் கடைகள் திறக்கவும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தொழிலாளர்கள் செல்ல பஸ், ரெயில் போக்குவரத்து இல்லாததால் கஷ்டப்படுகிறார்கள்.

குறைந் பயணிகளுடன்

இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின் அதாவது 18-ந் தேதி முதல் சென்னையில் குறைந்த பயணிகளுடன் பஸ் மற்றும் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அப்படி பஸ்களை இயக்கும் போது இருக்கைகளில் 20 பயணிகளை அமரச் செய்தும், 5 பயணிகளை நிற்பதற்கு அனுமதித்தும் ஆக மொத்தம் 25 பயணிகளுடன் பஸ்களை இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் குறைய குறைய பஸ்களில் பயணிகளை அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்துள்ளனர்.

இதேபோல் மின்சார ரெயில்களில் ஒரு பெட்டிக்கு 50 பயணிகளை மட்டுமே அனுமதிக்கும் வகையில் இயக்குவது என்றும் முடிவு செய்துள்ளனர். மெட்ரோ ரெயிலை பொறுத்தவரை மொத்தம் 160 பயணிகளுடன் இயக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவா் கூறும்போது, “பஸ், ரெயில்களை இயக்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொதுமக்களுக்கு அந்த அறிவிப்புகள் முறையாக தெரிவிக்கப்படும்.”
என்றார்.

கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி

குறைந்த அளவு பயணிகளுடன் பஸ், ரெயில்களை இயக்கினாலும் அங்கே கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். பஸ் நிறுத்தங்களிலும், ரெயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாகும். இதை சரிக்கட்டவும் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்த வேண்டும்.
அவசியமான பயணித்திற்கு மட்டும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து அத்தாட்சி கடிதம் கொண்டுவந்தால் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்க வேண்டும். அல்லது சொந்த தொழிலுக்கான சான்றை காட்டி பயணிக்க வேண்டும். அப்படியானால்தான் பயண நெரிசலை சமாளிக்க முடியும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.