July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

குடிக்கிறது தப்பா.. ஓபனாக ஒப்புக்கொண்ட கவர்ச்சி புயல் சோனா

1 min read
Drinking wine is wrong .. Open Sexy Storm Sona confessed

13.5.2020

அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு சிறுசிறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பின்னர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நடிகை சோனா.

கவர்ச்சி நடிகையாக மாறிய பிறகு சோனாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பெயரும் புகழும் தொடர்ந்து வர மற்றவர்களை போல் பெரியவர்களானதும் குடிப்பழக்கம், பார்ட்டி என அனைத்து கெட்ட பழக்கங்களையும் ஏற்படுத்தி கொண்டார்.

பெரும்பாலான படங்களில் இவருக்கு கவர்ச்சி வேடங்களில் தொடர்ந்து வந்ததால் பணத்திற்காக வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியதாயிற்று என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிறகு சோனாவுக்கு படவாய்ப்புகள் வருவதில்லை என யாரோ கொளுத்தி போட்டு விட்டார்கள் போல.

உடனடியாக தன்னை சந்திக்க வரும் பத்திரிக்கையாளர்களிடம் நான் குடிப்பழக்கத்தை விட்டு விட்டதாக மன்றாடி கூறியுள்ளார். இனி குடியை கனவில் கூட நினைக்க மாட்டேன் என சத்தியம் செய்கிறாராம் சோனா. சோனா 2018ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது 4 படங்கள் ரிலீஸுக்கு ரெடி ஆக இருப்பதாக அவரே கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இனிமேல் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாக பேட்டி கொடுத்துள்ளார்.

இதனை கோலிவுட் வட்டாரங்களில் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என கிண்டல் செய்கிறார்களாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.