சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?
1 min read
சீரியல் நடிகைகளின் புதிய சம்பள பட்டியலால் தமிழ் சினிமாவின் நடிகைகளே சற்று ஷாக்கில் தான் இருப்பதாக தெரிகிறது. நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் கூட இப்போது தானே அதிகமாகி வருகிறது. ஆனால் ரொம்ப காலமாக சீரியல்களில் ராஜா சிம்மாசனம் நடிகைகள்தான்.
அதிலும் சீரியல் நாயகிகளுக்கு ரசிகர் மன்றமே தற்போது திறக்கப்படும் நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த ஹாட் பட்டியலில் லீக்காகி இருக்கிறது.

ஒரு எபிசோடுக்கு ரூ.10,000 வாங்கும் நடிகைகளாக, குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி, சாந்தி வில்லியம்ஸ், மோனிகா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களை விட தெய்வமகள் சீரியலின் மூலம் தமிழில் வில்லியையே லவ் செய்ய வைத்த ரேகா அண்ணியார், இளைஞர்களின் தற்போதைய கனவு நாயகி ஆல்யா மானசாவும் இருப்பதாக தெரிகிறது. ஆல்யா மானசா ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை வாங்குகிறாராம்.
காமெடி ரோலில் கலக்கி வரும் நடிகை நளினிக்கும், வில்லியாக நடிக்கும் சுதா சந்திரனுக்கும் ரூ.20,000 ஒரு எபிசோடுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. தென்றல் சுருதிக்கு பல சீரியல்கள் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அவருடன், மௌன ராகம் ஷமிதா, ’தெய்வமகள் சத்யா’ வாணி போஜன், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா ஆகியோர் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.35 ஆயிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகபட்சமாக, கடந்த 9 வருடத்திற்கும் அதிகமாக சன் தொலைக்காட்சியின் ப்ரைம் டைமை கைக்குள் வைத்திருக்கும் ராதிகா, தனது ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.1.5 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கிறது. வம்சம் சீரியலில் கலெக்டராக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு மொத்தமாக ரூ.70 லட்சம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்டை பார்த்தால் வெள்ளித்திரை நாயகிகளையே மிஞ்சும் போலவே. சினிமா நடிகைகளும் பேசாம சீரியல் பக்கம் போகலாமா என்று யோசிக்கிறார்கள்.