தொழில்துறையினருக்கு மேலும் தளர்வுகள் அளிக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min read
More relaxation for industries – Edappadi Palanisamy
15-5-2020
தமிழகத்தில் தொழில்துறையினருக்கு மேலும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்ட முறை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 17-ந் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகும் ஊரடங்கு நீடிக்கும் என்றும் அது மாறுபட்ட விதத்தில் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
அந்த 4 கட்ட ஊரடங்கில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் கொடுத்து தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக சிறு குறு தொழில் துறை உட்பட தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தளர்வுகள்
பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றன. சுமார் 1500 நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வருகின்றனர். மேலும் தொழில்துறையினருக்கு தமிழக அரசு மேலும் படிப்படியாக தளர்வுகளை அளிக்கும்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தொழில்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வேறு நாடுகளில் இருந்து இடம்பெயரும் நிறுவனங்களை தமிழகத்துக்குக் கொண்டுவர சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.