திருமண வதந்திகள் பற்றி நடிகை வரலட்சுமி
1 min read
Actress Varalakshmi about wedding rumors
திருமண வதந்திகள் பற்றி நடிகை வரலட்சுமி கடும் கோபத்தில் உள்ளார்.
நடிகை வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக விளங்கி வருகிறார். தற்போது தமிழில் ‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘சேஸிங்’, ‘டேனி’, ‘பிறந்தாள் பராசக்தி’ ஆகிய படங்களிலும், தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் கன்னடத்தில் ‘ரணம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது வரலட்சுமியின் திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சந்தீப் என்ற தொழில் அதிபரை வரலட்சுமி காதலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்தச் செய்தி தொடர்பாக நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏன் ஆர்வம்
எனக்குத் திருமணம் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த பிறகு எனக்கு மட்டும் ஏன் கடைசியாகத் தெரிகிறது? ஆனால் அவை எல்லாம் முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத் திருமணம் என்றால் நான் அதை நான் பகிரங்கமாக கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத் திருமணம் தற்போது இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை.
இவ்வாறு வரலட்சுமி கூறினார்.