June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா எங்களுக்கு கிடைத்த கவுரவம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்

1 min read

US President Trump says that Corona is the honor we got

21-5-2020

உலகிலேயே கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை அதிமாக கொண்டு நாடு என்ற கவுரவம் எங்களுக்கு கிடைத்தது பெருமைதான் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா

சீனாவில் உற்பத்தியான கொரோனா உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. ஆனாலும் இந்த கொரோனாவால் அதிகம் பாதித்த நாடு அமெரிக்காதான்.
உலகம் முழுவதும் நேற்று(புதன் கிழமை) வரை 50 லட்சத்து 36ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்து விட்டது.

இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டி விட்டது. அந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானாவர்களின் எண்ணிக்கையும் 93 ஆயிரத்தை கடந்து விட்டது.

கொரோனா பரிசோதனை அளவிலும் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 1 கோடியே 26 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கவுரவம்

இதனால் கொரோ தங்களுக்கு கவுரத்தை தந்துள்ளது என்று அமெரிக் அதிபர் டிரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார். அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இதுவும் ஒரு விதத்தில் எங்களுக்கு கிடைத்த கவுரவம்தான்.

ஏனென்றால் கொரோனா வைரஸ் பரிசோதனை எங்கள் நாட்டில் மிக சிறப்பாக நடந்து வருகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஏனென்றால் மற்றவர்களை விட அமெரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனையை செய்யப்பட்டு வருகிறது. எனவே அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளை கொண்டிருப்பதை மோசமான காரியமாக நான் பார்க்கவில்லை. உண்மையிலேயே இது ஒரு கவுரவம்தான்.

இது நமது பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் செய்த அனைத்து வேலைகளுக்கும் கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரம் ஆகும்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *