June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகை ரித்திகாவுக்கு ரசிகர்கள் சூட்டிய பட்டப்பெயர்

1 min read


Fame for actress Ritika

24-5-2020

நடிகை ரித்திகா சிங்குக்கு ரசிகர்கள் செல்லமாக பட்டப்பெயர் சூட்டியுள்ளனர். இதை அவர் பெருமையாக கருதுகிறார்.

நடிகை ரித்திகா சிங்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துவருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரைக்க அறிமுகமானார்.
இவர் பாக்சிங் விளையாட்டில் சிறந்த வீராங்கனை. இறுதி சுற்று படத்தில் அதே விளையாட்டு வீராங்கனையாக வருவதால் அந்த வேடம் அவருக்கு சிறப்பாக பொருந்தியது. இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.

பட்டப் பெயர்

தமிழில் இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ படம், இவருக்கு நிறைய ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்த படத்தில் வந்த ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற பெயர், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. ரித்திகா சிங்கை “நூடுல்ஸ் மண்ட” என்று செல்லமாக பட்டப்பெயர் சொல்லி அழைக்கிறார்கள். ரசிகர்களின் அன்பை பார்த்து ரித்திகாசிங் நெகிழ்ந்து போனாராம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.