4 பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கைதானவருக்கு கொரோனா
1 min read29.4.2020
சேலம் தாதகாபட்டி சீரங்கன் 4வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன்((35). இவர் வீட்டில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இங்கு வேலைக்கு வந்த 2 பெண்களை மனைவியுடன் சேர்ந்து நிர்வாணமாக போட்டோ எடுத்து பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்கள், டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தனர். இதையடுத்து லோகநாதன், அவரது மனைவி ரூபா ஆகியோர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் லோகநாதனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில் மேலும் 2 பெண்கள்,லோகநாதன் அவரது கூட்டாளிகள் தாதகாப்பட்டி வசந்தநகரை சேர்ந்த கிருஷ்ணன்(எ)சிவா(36), பங்களா தோட்டம் பராசக்தி நகரை சேர்ந்த அஜய்(எ) பிரதீப்(28) ஆகியோர் மீது புகார் கொடுத்தனர். தங்களையும் ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக அவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.தலைமறைவான ரூபாவை போலீசார் தேடி வருகின்றனர்.விசாரணையில்,லோகநாதன் அழகு நிலையம் என்ற பெயரில் விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது. விபசாரத்திற்கு உடன்படாத பெண்களை மிரட்டி நிர்வாண படம் எடுத்து வைத்துக்கொண்ட அதைக்காட்டி பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு நேற்று காலை வந்தது. அதில் முக்கிய குற்றவாளியான லோகநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் போலீசார் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவரை கைது செய்து வந்த பெண் போலீசார் கண்ணீர் விட்டு அழுதனர். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, அதிகாலையில் தான் வீட்டிற்கு சென்றதாகவும், குழந்தைகளுடன் இருந்ததாகவும் கூறி கண்கலங்கினர்.
இந்நிலையில் லோகநாதன் உள்பட 3 பேரையும் கைது செய்வதற்கு மகளிர் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் சென்றிருந்தனர். கைது செய்து வந்த பிறகு அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேனிலும், மகளிர் போலீஸ் ஸ்டேனிலும் 3பேரையும் வைத்திருந்தனர். இப்பணியில் உதவி கமிஷனர் ஈஸ்வரன், மகளிர் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள்,டவுன் இன்ஸ்பெக்டர் குமார், கிச்சிப்பாளையம் எஸ்.ஐ. சத்தியமூர்த்தி, அன்னதானப்பட்டி எஸ்.ஐ. முரளி,கொண்டலாம்பட்டி எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் உள்பட 30 போலீசார் ஈடுபட்டனர்.
தற்போது இவர்கள் அனைவரும் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 போலீஸ் ஸ்டேசனிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.உள்ளே யாரும் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓமலூர் சிறை கைதிகள் கலக்கம்
கைதான லோகநாதன் உள்பட 3 பேரையும் போலீசார் ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர். அப்போது டாக்டர்கள் வழங்கிய மருத்துவ சான்றிதழையும் வழங்கினர். அதில் கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னரே சிறை அதிகாரிகள் 3 பேரையும் அடைத்தனர். தற்போது லோகநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதால் ஓமலூர் கிளை சிறை அதிகாரிகள் உள்பட 81 கைதிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். தற்போது அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லோகநாதன் உள்பட 5 கைதிகளை தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர்.இதனால் மற்ற கைதிகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும் அனைத்து கைதிகள்,சிறைவார்டன்களுக்கு பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறை முழுவதும் கிருமி நாசினிதெளிக்கப்பட்டுள்ளது.