தமிழக முன்னாள் பாரதீய ஜனதா தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்
1 min read
ormer Bharatiya Janata Party leader KN Lakshmanan died
தமிழக முன்னாள் பாரதீய ஜனதா தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்
1-6-2020
தமிழக பாரதீய ஜனதாவின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம் அடைந்தார்.
கே.என்.லட்சுமணன்
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் கே.என்.லட்சுமணன். இவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிறகு மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றவர். இவருக்குப் பின்னர்தான் இல.கணேசன் மாநில தலைவர் ஆனார்.
கே.என்.லட்சுமணம் தற்போது அவரது சொந்த ஊரான சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் குணமாகி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) கே-என்.லட்சுமணன் மரணம் அடைந்தார். அவரதுக்கு வயது 92.
இவர் கடந் 2001-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதி போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
இவருக்கு ஒரு முறை கேரள கவர்னராக ஆகும் வாய்ப்பு வந்தது.