பரீட்சை எழுத, ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு போக்குவரத்து
1 min read
Boat traffic directed to a single student to write the exam
2-5-2020
கேரளாவில் ஒரே ஒரு மாணவிக்காக படகு போக்குவரத்து விடப்பட்டது. அந்த மாணவி தேர்வுகாக இந்த வசதி செய்யப்பட்டது.
தேர்வு எழுத…
கொரோனா பரவல் காரணமாக எல்லா மாநிலங்களிலும் கல்வி நிறுவங்கள் மூடப்பட்டன. அதேபோல் தேர்வுகள் நிறுத்தி வைக்க்பட்டன.
கேரளா மாநிலத்தில் நடைபெற இருந்த பிளஸ் -1 பொதுதேர்வின் இரண்டு பாடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் விடுபட்ட தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
படகு
ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு செல்ல படகு இயக்க உதவ வேண்டும் என கேரள மாநில நீர்வழி போக்குவரத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
இதனையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்ற சம்பந்தப்பட்ட துறை 70 பேர் பயணிக்க கூடிய படகு ஒன்றை இயக்க அனுமதித்தது. அது மட்டுமல்லாது மாணவி தேர்வு எழுதி முடித்த பிறகு மாணவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி அந்த மாணவிக்.கு மட்டும் படகு விடப்பட்டது. மாணவி ஒரே ஒருவருக்காக படகு போக்குவரத்து இயக்க பட்ட போதிலும் பயணக்கட்டணம் எப்போதும் வசூலிப்பது போன்றே ரூ.18 மட்டுமே வசூலிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.