எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
1 min read
Bomb threat to Edappadi Palanisamy home
2-5-2020
சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னைியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. எதிர் முனையில் பேசியவன் சென்னையில் உள்ள முதல்-அமைச்சரின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டான்.
இதனையடுத்து முதல்-அமைச்சரின் வீட்டிற்கும், தலைமை செயலகத்திற்கும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் முதல்வரின் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. அதேபோல் தலைமை செயலகத்திலும் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் இது மிரட்டல் என்பது தெரியவந்தது.
வலைவீச்சு
இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று கண்டறிய போலீசார் சைபர் கிரைம் போலீஸ் மூலம் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அவர் எந்த எண்ணில் இருந்து பேசினார்? எங்கிருந்து பேசினார் என்பதை ஆய்வு செய்து வரகின்றனர். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் முதல்-அமைச்சரின் வீட்டிற்கு மர்ம டெலிபோன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது மிரட்டல் விடுத்தவர் மடிப்பாக்கத்தச் சேர்ந்த சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவர் என்பது கண்டறியப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
இப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று இன்னும் தெரியவில்லை.