தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா
1 min read
Corona to DMK, MLA, J.Anblagan
3-5-2020
தி.மு.க. எம்.எல்..ஏ. வான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் தனியார் ஆஸ்பத்த்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெ.அன்பழகன்
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் அதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அறிகுறி இல்லாமலே பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில்,1,286 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஜெ. அன்பழகன்
இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனுக்கு(வயது 61) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருக்கிறார்.
தமிழகத்தில் எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா வைரஸ் பற்றி இருப்பது இதுவே முதல்முறை.
கொரோனா பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு மூச்சு திணறல் ஏப்பட்டதாகவும் அதனால் வென்டிலேடர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்றும் அவருக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.