June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தலைமைச் செயலாளர் பதவி காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

1 min read

Chief Secretary Shanmugam’s 3 month extension

4-5-2020
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தலைமைச் செயலாளர்

தமிழக தலைமைச் செயலாளராக இருப்பவர் சண்முகம். இவருக்கு முன்பு தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்றார்.
அப்போது இவரை விட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் இருந்தபோதும் இவர் நிதித்துறை செயலாளராக இருந்ததால் இவரை தலைமை செயலாளராக நியமித்தனர்.

இவரது பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி முடிவடைகிறது. இவரது பதவி காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சண்முகத்தின் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் வரும் அக்டோபர் மாதம் வரை பதவியில் நீடிப்பார்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்

தலைமைச் செயலாளர் சண்முகம் சேலம் மாவட்டம் வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தவர், இவர் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார்.
சண்முகம் வேளான் முதுகலை பட்டம் பெற்றவர். 1985-பேட்ச் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார்.

1985-ம் ஆண்டு தஞ்சை உதவி மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கினார். அதன்பின்னர், சிவகங்கை, புதுக்கோட்டை கலெக்டராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முதல் நிதித்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் மாநிலத்தில் அவ்வப்போது நிலவும் நிதி நெருக்கடியை எளிதில் சமாளிப்பார். கருணாநிதி காலத்திலேயே நிதித்துறை செயலாளாராக இருந்தவா என்பதால் இவர் 9 பட்ஜெட்களையும், 2 இடைக்கால பட்ஜெட்களையும் தயாரித்து கொடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *