தமிழகத்தில் ஒரேநாளில் 1286 பேருக்கு கொரோனா
1 min read
Coronation of 1286 people in one day in Tamil Nadu
3-5-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
1286 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நிலவரம் குளித்து தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை அறிவித்தது.
அதன்படி தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.
இன்று(புதன் கிழமை) பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 27 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இன்று கொரோனா பாதித்தவர்களில் 16,181, பெண்கள். 9,677 மற்றும் 14 திருநங்கைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
11 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 11 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 616 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 14,316 ஆக உயர்ந்தது. தற்போது கொரோனாவுக்காக 11,435 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று(புதன் கிழமை) பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 27 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஆண்கள்16,181. பெண்கள் 9,677 பேர். திருநங்கைகள் 14 பேர்.
சென்னையில்…
இன்று சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1012. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17, 598 ஆகும். இன்று மட்டும் 9,034 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 8,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.
பிற மாவட்டங்களில்…
செங்கல்பட்டில் இன்று 61 பேருக்கும், திருவள்ளூரில 58 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19பேருக்கும், திருவண்ணாமலையில் 21 பேருக்கும்(இதில் 5 பேர்வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்), தூத்துக்குடியில் 17 பேருக்கும், நெல்லையில் 12 பேருக்கும்(இதில் 6 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்), மதுரையில் 7 பேருக்கும், கோவையில் 9பேருக்கும் (இதில் 5 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவாகள் ), கடலூரில் 6 பேருக்கும் (இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்), கள்ளக்குறிச்சியில் 4 பேருக்கும்(இதில் ஒருவர் வெளிமாநிலத்தில் வந்தவர்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சேலத்தில் 3 பேருக்கும்(இதில் 2 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்), தென்காசியில் 4 பேருக்கும்( இதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்), தஞ்சாவூரில் 6 பேருக்கும்., ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், வேலூரில் 4 பேருக்கும் இன்றுகொரோனா பாதித்துள்ளது.
மேலும் விழுப்புரம், விருதுநகர், தர்மபுரி கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், சேலம், ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தேனியில் வெளி மாநிலத்தில் இருந்த வந்த ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.
விமானம் மூலம் இன்று வந்தவர்களில்15 பேருக்கும், விமானநிலையத்தில் தனிமைப்படுத்த பட்டவர்களில் 4 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.