தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 19 பேர் சாவு
1 min read
19 death for corona in tamil nadu one day
6-5-2020
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுகு 19 பேர் இறந்துள்ளனர்.
1,458 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது.‘
இன்றும்( சனிக்கிழமை) 7-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 633 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,395 ஆக உயர்ந்துள்ளது.
19 பேர் சாவு
இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு19 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.