கொரோனாவுக்கு 20 லட்சம் தடுப்பூசி தயார்; டிரம்ப் அறிவிப்பு
1 min read
20 lakh vaccines ready for Corona The Trump announcement
6-5-2020
கொரோனாவுக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா
கொரோனா சீனாவில் உருவானாலும் தற்போது அமெரிக்காவில்தான் பெருமளவு உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு18 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அதேநேரம் 7 லட்சத்து30 ஆயிரம் வரை பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு இதுவரை அதிகாரப் பூர்வமாக மருந்தோ, தடுப்பூசியோ கண்டு பிடிக்கப்பட வில்லை. கொரோனா தாக்கியவர்களுக்கு மலேரியா காய்ச்சலுக்கு கொடுக்கும் மருந்தைதான் கொடுக்கிறார்கள்.
பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கான மருந்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியல் ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகள் தாங்கள் கண்டுபிடித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளன.
தடுப்பூசி
இந்த நிலையில் அமெரிகா அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறும்போது “தடுப்பூசிகள் குறித்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். தடுப்பூசி தயாரிப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வியக்கத்தக்க வகையில் நாம் சிறப்பாக செயல்படுகிறோம். சொல்லப்போனால் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த உடன் 20 லட்சம் அளவிற்கான மருந்துகளை விநியோகம் செய்ய தயாராக உள்ளோம். நான்கு நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் உள்ளன. அதிகாரிகள் இப்போது நோயை புரிந்துகொண்டனர்” என்றார்.
ஆனால் எந்த நிறுவனம் மருந்து தயாரிப்பை தொடங்கியுள்ளது என்பதை அவர் குறிப்பிட வில்லை. மாடர்னா இன்க்., அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி, பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க் அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள் மருந்து தயாரிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு சாத்தியமான தடுப்பூசி கண்டறிவதில் தேசிய சுகாதார நிறுவனங்கள் மாடர்னா மருந்து நிறுவனத்துடன் விரைவான பணிகளில் ஈடுபட்டுள்ளன.