தமிழகத்தில் ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா
1 min read
Corona to 1,515 people in one day in Tamil Nadu
7-5-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
1,515 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நீடித்து வருகிறது. தினமும் மாலையில் கொரோனா பற்றிய தகலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில இன்று (ஞாயிறறுக்கிழமை) மட்டும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உ்ளளது. இவர்களில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேரும் அடங்குவர். தமிழக்தில் ஒரே நாளில்1,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறை ஆகும்.
சென்னையை பொறுத்தவரை ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.. சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை சென்னையில் பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்துள்ளது.
18 பேர் சாவு
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் இறந்துள்ளனர். இதில் 13 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 5 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் இறந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 604 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.. தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 14,396 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 30,152லிருந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 15,671 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக..
மாவட்ட அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
சென்னை – 22,149
செங்கல்பட்டு – 1,854
அரியலூர் – 380
கோவை – 161
கடலூர் – 481
தர்மபுரி – 13
திண்டுக்கல் – 167
ஈரோடு – 73
கள்ளக்குறிச்சி – 272
காஞ்சிபுரம் – 516
தென்காசி – 103
நெல்லை – 42
தூத்துக்குடி – 329
ராமநாதபுரம் – 106
ராணிப்பேட்டை – 130
சேலம் – 216
கன்னியாகுமரி – 87
கரூர் – 87
கிருஷ்ணகிரி – 37
மதுரை – 312
நாகப்பட்டினம்- 76
நாமக்கல் – 85
நீலகிரி – 14
பெரம்பலூர் – 143
புதுக்கோட்டை – 33
ராமநாதபுரம் – 106
ராணிப்பேட்டை – 130
சேலம் – 216
சிவகங்கை – 35
தஞ்சை – 113
தேனி – 124
திருப்பத்தூர் – 42
திருப்பூர் – 114
திருவள்ளூர் – 1,329
திருவண்ணாமலை – 492
திருவாரூர் – 59
திருச்சி – 116
வேலூர் – 64
விழுப்புரம் – 380
விருதுநகர் – 149
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் – 133
உள்ளூர் விமானங்கள் மூலம் வந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் – 47
ரெயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் – 260