August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

தொல்லியல் துறையின் கீழ் உள்ள சுற்றுலாத் தலங்கள் திங்கள் முதல் திறப்பு

1 min read
Tourist places under the Archeology Department open from Monday

7-5-2020

மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள சுற்றுலாத் தலங்கள் 8-ந் தேதி (நாளை) முதல் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

சுற்றுலாத் தலங்கள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே அதவாது மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா பரவி விடாமல் இருக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் தஞ்சை பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை மத்திய தொல்லியல் துறையின் கீழ் இருப்பதால் இவகைளும் மூடப்பட்டுள்ளன.

திறப்பு

இந்த நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் 8-ந் தேதி முதல் (நாளை) திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் சுற்றுலா தலங்களாக சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் கால நினைவுச்சின்னங்கள் மட்டும் 600-க்கும் மேற்பட்டவை உள்ளன. சுற்றுலா தலமாக விளங்கும் கோவில்கள் மட்டும் 21 ஆயிரத்து 600 உள்ளன. இந்த சுற்றலா தலங்களில் மட்டும் 360 பேர் வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படுவதால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத்சிங் படேல் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *