உல்லாசமாக இருந்துவிட்டு நடிகையை ஏமாற்றிய நடிகர் – போலீசில் புகார்
1 min read
11.6.2020
Actor who cheated on the actress after having fun – complained to the policeசினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பல இளம் பெண்கள் தங்களது கற்பை இழந்து வரும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சினிமா ஆசையில் பிரபல நடிகர் ஒருவருடன் பலமுறை உல்லாசமாக இருந்து தன்னுடைய கற்பை தொலைத்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சசிகுமார் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து இருந்தார் அந்த பிரபல நடிகை. அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லையாம்.
2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளார் அந்த பிரபல நடிகர். ஆனால் அந்த படம் வந்த சுவடே தெரியாமல் அழிந்து விட்டது. இருந்தாலும் ஹீரோ என்ற இமேஜை பயன்படுத்தி நடிகையுடன் சில வருடங்களாக பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அந்த நடிகையை பிரபல நடிகர் ஏமாற்றி விட்டதாக தெரிகிறது. அதிலும் அவர் அந்த நடிகையிடம் உனக்கு சினிமாவில் ஹீரோயினாக ஆக்குகிறேன் என ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியுள்ளார்.
சமீபகாலமாக இளம் பெண்களை மயக்கும் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தையாக இது மாறிவிட்டது. இது தெரிந்தும் பல இளம்பெண்கள் அதில் மாட்டிக் கொண்டு சீரழிவது தான் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இந்நிலையில் அந்த நடிகை தைரியமாக நடிகரின் மீது போலீசில் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனியும் ஏமாற்றினால் சும்மா இருக்க மாட்டோம் என பல பெண்களின் குரலாக முதல் ஆளாக இந்த விஷயத்தில் தைரியமாக குரல் கொடுத்துள்ளார் அந்த நாயகி.