இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 10,956 people one day in India
12-6-2020
இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
10,956 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பற்றிய தகவலை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
இந்தியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
396 பேர் சாவு
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
4-வது இடம்
உலக அளவில் அதிக கொரோனா பாதிக்கப்பட்டதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.