June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு 2 ரூபாயில் மருந்து- பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

1 min read
Coronation of medicine Rs. 2 - HC order to consider

12-6-2020

கொரோனாவுக்கு 2 ரூபாயில் மருந்து இருப்பதாக டாக்டர் ஒருவர் கூறியதை அடுத்து அதனை பரிசீலிக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

கொரோனாவுக்கு மருந்து

உலகம் முழுவதும் அச்சத்தை ஏறபடுத்தி வரும் கொரோனாவுக்கு இதுவரை அதிகாரபூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் ஆராய்ச்சியில்தான் உள்ளது.
இந்த நிலையில் தமிழக டாக்டர் ஒருவர், தான் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து உள்ளார். அந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த டாக்டர் பெயர் வசந்த குமார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன்.
ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உ்ளளது.

2 ரூபாய்க்கு மருந்து

இந்த மனு நேற்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடும் போது, “மனுதாரர் கண்டுபிடித்துள்ள‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை ரூ.2-க்கு குறைவானது தான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கீழ் கண்டவாறு உத்தரவிட்டனர்.
டாக்டர் வசந்த குமார் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-தகவல்; டி.பாலசுப்பிரமணி, மூத்த பத்திரிகையாளர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *