கொரோனா சமூக பரவல் என்றால் என்ன?- டாக்டா சுதா சேஷய்யன் விளக்கம்
1 min read
What is Corona Social Distribution? - Explanation by Dr. Sudha Seshayyan
12-6-2020
கொரோனா சமூக பரவல் என்பது என்ன என்பது குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக பரவலா?
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. பெரிய நகரங்களை பொறுத்தவரை மராட்டியம், தமிழ்நாடு டெல்லி, போன்ற நகரங்களில் மிக அதிகமாக பரவுகிறது.
இப்படி பரவியதால் இது சமூக பரவலாக மாறிவிட்டது என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு சமூக பரவல் வரவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
சுதா சேஷய்யன் விளக்கம்
சமூக பரவல் என்றால் என்ன என்பது குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:-
சமூகத்தில் கொரோனா தொற்று யாரிடம் இருந்து, யாருக்கு பரவியது? என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை ஏற்படுவதுதான் சமூக பரவல் ஆகும். தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடித்தால், அவர் யாரை சந்தித்தார்? அவரை யார் சந்தித்தார்கள்? இவரிடம் இருந்து யாருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது? அதை எப்படி தடுப்பது? என்பது போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்ய முடிகிற நிலை இருக்கிறது.
இதை ஆங்கிலத்தில் ‘கான்டக்ட் டிரேசிங்‘ என்பார்கள். அதாவது தொடர்புகளை கண்டுபிடித்தல் ஆகும். சமூக பரவல் வந்துவிட்டால் தொடர்புகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கொரோனா பரவல் மிக அதிகமாகிவிடும்.
இவ்வாறு டாக்டர் சுதாசேஷய்யன் கூறினார்.