இந்தியாவில் ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா
1 min read
Corona to 11,929 one day in India
14-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
11,929 பேருக்கு கொரோனா
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பற்றிய தகவல்களை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்பதாவது:-
இன்று(ஞாயிற்றுக்கிிழமை) காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது. அதில் தற்போது ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 379 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
311 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் 311 பேர் இறந்துள்ளனர். இதனால் இதனால் ரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மாநிலம் வாரியாக…
இந்தியாவில் கொரானா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் அடைப்புக்குறிக்குள் இறந்தவர்கள் எண்ணிக்கையும் மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 1,04,568 ( 3,830)
தமிழ்நாடு- 42,687 (397)
டெல்லி -38,958 (1,271)
குஜராத்-23,038 (1,448)
உத்தரபிரதேசம்.,-13,118 (385)
ராஜஸ்தான்-12,401(282)
மேற்கு வங்காளம்- 10,698 (463)
மத்தியபிரபிரதேசம்-10,641 (447)
கர்நாடகா-6,824 (81)
அரியானா-6,749 (78)
பீகார்-6,290 (39)
ஆந்திரா -5,965 (82)
காஷ்மீர்-4,878 (55)
தெலுங்கானா-4,737(182)
ஒடிசா-3,723 (10)
அசாம்-3,718 (8)
பஞ்சாப் 3,063 (65)
கேரளா-2,407 (19)
உத்தர்காண்ட்-1,785 (23)
ஜார்க்கண்ட்-1,711 (8)
சத்தீஸ்கர்-1,512 (6)
திரிபுரா-1,046 (1)
கோவா-523 (0)
ஹிமாச்சல பிரதேசம்-502 (6)
மணிப்பூர்-449 (0)
லடாக்-437 (1)
சண்டிகர்-345(5)
புதுச்சேரி-176 (2)
நாகலாந்து-163(9)
மிஜோரம்-107(0)