ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் 15 வயது சிறுமி தீக்குளிப்பு
1 min read
15.6.2020
15 year old girl burnedவேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 11ம் வகுப்பு மாணவி. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் பின்பக்கம் உள்ள குளியலறையில் குளித்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் இதை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பின்னர் வீடியோவை அந்த சிறுமியிடம் காண்பித்து ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால் சமூகவலைதளங்களில் வெளியிடுவோம் என்று அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் மனவேதனையடைந்த சிறுமி, நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். பலத்த தீக்காயமடைந்த அவருக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை நேற்று கொடுத்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து அதேபகுதியைச் சேர்ந்த பூனைக்கண்ணன்(எ)ஆகாஷ்(20), பாலாஜி, கணபதி(எ)தாமஸ்(19) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.