இந்தியாவில் ஒரே நாளில் 10974 பேருக்கு கொரோனா
1 min read
10,973 person affected for corona one day in india
17-6-020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
10,974 போருக்கு கொரோனா
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பற்றிய தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காயைில் வெளியிட்டு வருகிறது.அதன்படி இன்று காலையில் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில்(செவ்வாய்க்கிழமை) இந்தியாவில் 10974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 354065 ஆக உயர்ந்துள்ளது.. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 2003 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11903 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,86,935 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 155227 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மராட்டிய மாநிலம்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 113445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 48019 பேருக்கும், டெல்லியில் 44688 பேருக்கும், குஜராத்தில் 24577 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மராட்டிய மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,409 பேர் இறந்துள்ளனர். நேற்று (ஜூன் 16) ஒரே நாளில்10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சமாக அதிகரித்தது.
மாநில வாரியாக…
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 1,13,445( 5,537)
தமிழகம்- 48,019(528)
டெல்லி -44,688(1,837)
குஜராத்-24,577(1,533)
உத்தரபிரதேசம்-14,091(417)
ராஜஸ்தான்-13,216(308)
மேற்கு வங்காளம்- 11,909(495)
மத்திய பிரதேசம்-11,083(476)
அரியானா-8,272(118)
கர்நாடகா-7,530(94)
ஆந்திரா -6,841(88)
பீகார்-6,778(41)
தெலுங்கானா-5,406(191)
காஷ்மீர்-5,298(63)
அசாம்-4,319(8)
ஒடிசா-4,163(11)
பஞ்சாப் 3,371(72)
கேரளா-2,622(20)
உத்தரகாண்ட்-1,942(25)
ஜார்க்கண்ட்-1,839(9)
சத்தீஸ்கர்-1,781(9)
திரிபுரா-1,092(1)
லடாக்-649(1)
கோவா-629(0)
இமாச்சல பிரதேசம்-56-(8)
மணிப்பூர்-500(0)
சண்டிகர்-358(6)
புதுச்சேரி-216(6)
நாகலாந்து-179(0)
மிசோரம்-121(0)