June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

20 வீரர்களை பறிகொடுத்த இந்திய-சீன எல்லையில் படைகள் வாபஸ்

1 min read
Troops withdraw to Indo-China border

17-6-2020

ராணுவ வீரர்கள் 20 பேரை பறிகொடுத்த இந்திய -சீன எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் தற்போது அமைதி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

20 பேர் மரணம்

லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில், சீன வீரர்களுடன் நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தமிழக வீரர் பழனியும் ஒருவர். மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் இதில் 5 பேரின் நிலைமை ஆபத்தானதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாபஸ்

இந்த நிலையில், இந்தியா – சீனா இடையே, எல்லை பதற்றத்தை தணிக்கும் விதமாக, இருதரப்பிலும் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இருநாட்டு ராணுவமும் லடாக் எல்லையில், கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

அனால், பாங்காக் ஏரி, தவுலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *