June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் கொரோனா

1 min read

Corono increes all dist. in tamil nadu

22-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.

,710 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை தினமும் மாலையில் தமிழகத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மடடும் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 58 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,592 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,19,204 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

37 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவல் 37 பேர் இறந்துள்ளனர். இதில் 30 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 7 பேரும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 794 இறந்துள்ளனர்.

.கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,112 பேர் குணம் அடைந்துள்ளர். . தற்போது 27,178 பேர் பல் வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில்…

இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,710 பேரில் சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதன் மூலம் சென்னையில் மட்டும் 42,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாவட்டம் வாரியாக…

ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்கள் விவரம் வருமாறு:-

அரியலூர் 12
செங்கல்பட்டு 126
சென்னை 1,487
கோவை 12(1)
கடலூர் 63(13)
தர்மபுரி 2
திண்டுக்கல் 7
ஈரோடு 2
கள்ளக்குறிச்சி 14(1)
காஞ்சிபுரம் 56
கன்னியாகுமரி 10(2)
கரூர் 4
கிருஷ்ணகிரி 9
மதுரை 157( 4)
நாகப்பட்டினம் 17(3)
நாமக்கல் 1
நீலகிரி 2
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 16
ராமநாதபுரம் 18
ராணிப்பேட்டை 52
சேலம் 24(1)
சிவகங்கை 33
தென்காசி 20
தஞ்சாவூர் 36
தேனி 36
திருப்பத்தூர் 26(2)
திருவள்ளூர் 120
திருவண்ணாமலை 139(9)
திருவாரூர் 13
தூத்துக்குடி 62(5)
திருநெல்வேலி 5
திருப்பூர் 2
திருச்சி 51
வேலூர் 13
விழுப்பும் 41(1)
விருதுநகர் 5
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் 3
உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்கள் 13

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *